Local News Politics

கஜேந்திரகுமார் உள்ளிட்ட பலருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (09) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நாளையும் (10) நாளை மறுதினமும் (11) போராட்டம் செய்ய வேண்டாம் என்று அறிவித்தே இந்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ், தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரையானது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அப்பகுதியில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுக்ஷ அந்தவகையில், பொசன் போயா தினமான நாளையும் நாளை மறுதினமும் குறித்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video