Local News

கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை – பொலிஸார் தெரிவிப்பு

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று (18) மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மூன்று T-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது குறித்த துப்பாக்கிகள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் T-56 மகசின் போலியானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் கிடந்த பொதி ஒன்றை சோதனையிட்ட போது இந்த போலித் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த போலித் துப்பாக்கிகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video