Local News செயல்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, கட்டாய விடுமுறையில் அனுப்பி வைப்பு

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை இன்று (09) தீர்மானித்தது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video