Local News

சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய பொலிஸ் பிரிவு

கணினி சார்ந்த குற்றங்களை தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நேற்று (06) பொல்பிட்டிய பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார். தற்போது அதிகரித்து வரும் குற்றங்களின் தன்மை குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர், நாளொன்றுக்கு 23 முதல் 25 வரையான சைபர் குற்றங்கள் பதிவாகுவதாகவும், இது கணிசமான அளவு உயர்வு எனவும் சுட்டிக்காட்டினார்.

இக்குற்றங்களை வினைத்திறனுடன் விசாரணை செய்து தீர்ப்பதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பம், விசேட அறிவு மற்றும் பொலிஸ் திணைக்களத்தை நவீனமயமாக்கும் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் சிறந்த, வினைத்திறனான மற்றும் ஊழலற்ற திணைக்களமாக மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்காகத் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், திறமையான அதிகாரிகள் உயர்மட்டத்திற்குச் செல்வதற்கான சூழலை உருவாக்குவதற்கும், தவறிழைக்கும் அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்குமான பொறிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video