Sports

தொடர் தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் வீரர்களுக்கு கிடைத்த பரிசு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோரின் மத்திய ஒப்பந்தங்களை (Central Contracts) பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) திறம்பட குறைத்துள்ளது.

சமீபத்திய தொடர்களில் பாகிஸ்தான் அணியின் படுமோசமான தோல்விகள் மற்றும் வீரர்களின் சுமாரான ஆட்டத்திற்குப் பின்னரே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 2025-2026 ஆம் ஆண்டுகளுக்கான 30 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணியின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் A பிரிவில் காணப்பட்ட பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் B பிரிவிற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் மத்திய ஒப்பந்தத்தின் படி பிரிவு A வீரர்கள் மாதத்திற்கு (PKR) 4.5 மில்லியன் பெறுவதுடன், பிரிவு B வீரர்கள் (PKR) 3 மில்லியனையும், பிரிவு C வீரர்கள் (PKR) 1 மில்லியனையும், பிரிவு D வீரர்கள் (PKR) 750,000 ஐயும் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் குழாமை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்தது. குறித்த குழாமில் பாகிஸ்தானின் முன்னணி வீரர்களான பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video