பதுளையிலிருந்து நெலுவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று திடீரென தீ பிடித்து முற்றாக எரிந்துள்ளது.
திங்கட்கிழமை (02) காலை 9 மணியளவில் சென்ஜம்ஸ் பகுதியில் வைத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயில் எவருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை, என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டாம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave feedback about this