Radio Raaga Local News பாடசாலை மாணவனை பலிகொண்ட தனியார் பேருந்து விபத்து
Local News

பாடசாலை மாணவனை பலிகொண்ட தனியார் பேருந்து விபத்து

இன்று காலை உடுதும்பராவிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று, பல்லேகெலே இராணுவ முகாம் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு பாடசாலை மாணவர்களுடன் மோதியதில் கடுமையான விபத்து ஏற்பட்டுள்ளது

.விபத்தின் போது மாணவர்கள் இருவரும் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒருபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றொரு மாணவர் தீவிர காயங்களுடன் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version