Local News

பெண்ணை கடத்தி கிணற்றில் வீசப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட தாய்க்கு நீதிகோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்யப்பட்ட தாய்க்கு நீதி கோரியும் சட்டத்தரணிகளை கொலைக்கார கும்பலுக்கு சார்பாக ஆஜராக வேண்டாம் கோரி என இன்று வெள்ளிக்கிழமை (27) காலையில் மட்டு காந்தி பூங்காவில் இருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக பழைய கச்சேரியை சென்று மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹிந்தி நித்தியிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

கடந்த 20 ம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் வீசப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வெல்லாவெளி 40ம் கிராமத்தை சேர்ந்த நளாயினி ரவி என்ற 48 வயதுடைய பெண்ணுக்கு நீதி கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இதையடுத்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று காலை 8.30 மணிக்கு; நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் சிறிநாத், இரா.சாணக்கியன் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மக்கள் ஒன்று திரண்டு கொலை செய்யப்பட்ட தாய்க்கு நீதி வேண்டும்.

கைது செய்யப்பட்ட கொலை கும்பலுக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது. பெண்களின் சுதந்திரம் கயவர்கள் கையில் எனில் நீதி எங்கே போய்விட்டது, மனித நேயமற்ற கொலைகார கும்பலை தூக்கில் இடு, நளாயினியின் கொலைக்கு நீதி கொடு, கிணற்றில் வீசிய கயவர்களுக்கு என்னதான் தண்டனை, நளாயினி நகை அணிந்தது குற்றமா?, எங்கள் கிராமத்தின் தாயின் சடலத்தை திருப்பி கொடு, குற்றவாளிகளுக்கு உடன் தண்டனை கொடு,கொலையாளிகளுக்கு துணை போகாதீர்கள், நீதி சாகக்கூடாது, என சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்து பஜார் வீதி ஊடாக நீதிமன்ற வீதி சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து பழைய கச்சேரிக்கு சென்றனர்.

இதன் போது இன்று அங்கு இடம்பெற்றுவரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தையடுத்து கச்சோரி வாசலில் பொலிசார் பஸ் வண்டியை குறுக்கே நிறுத்தி ஆர்ப்பாட்டகாரர்களை உட்செல்ல விடாது தடுத்து நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து தடுத்து நிறுத்தப்பட்ட ஆர்ப்பாட்கார்களிடம் சென்ற அரசாங்க அதிபர் ஆர்பாட்கார்களின் கோரிக்கையை கேட்டறிந்து கொண்டு அவர்களில் உள்ளே அழைத்துச் சென்று அமைச்சர் சுனில் ஹந்தி நெத்தியிடம் மக்கள் நீதி கோரிய மகஜர் ஒன்றை கையளித்ததையடுத்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்ததையடுத்து அங்கிருந்து ஆர்ப்பாட்டக்கார்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video