Sports

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது.

தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி ​ஹொங்கொங் அணியை எதிர்கொள்கிறது.

செப்டம்பர் 28 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த தொடரில் 8 அணிகள் ஆசிய கிண்ணத்திற்காக போட்டியிடவுள்ளன.

இலங்கை அணி எதிர்வரும் சனிக்கிழமை பங்களாதேஸ் அணிக்கு எதிராக தமது முதல் போட்டியை ஆரம்பிக்கவுள்ளது.

குழு நிலை போட்டிகளில் எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவுள்ளன.

திட்டமிடப்பட்ட 19 போட்டிகளில், இறுதிப் போட்டி உட்பட 11 போட்டிகள் டுபாயில் நடைபெறவுள்ளதுடன் எஞ்சிய எட்டு போட்டிகள் அபுதாபியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சம்பியனான இந்தியா, எட்டு கிண்ணங்களை ஆசிய கிண்ண வரலாற்றில் பெற்றுள்ள அணியாகும். இலங்கை 6 தடவைகளும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் 2 தடவைகளும் கிண்ணம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video