Crime and Threats Local News

மீன் படகுகளிலிருந்து 450 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்பு

தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் நேற்று (27) கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் இருந்து 450 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் இணைந்து நடத்திய இந்த சுற்றிளைப்பில் பதினொரு மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தேவேந்திர முனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொறுப்பேற்கப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளும், போதைப்பொருளும் தற்போது திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video