மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பனியன் பாலத்திற்கு அருகில் மண்மேடொன்று வீடொன்றின் மீது இடிந்து வீழ்ந்துள்ளது.
இதன் போது மண்மேட்டில் ஐவர் புதையுண்டதாக மஸ்கெலிய காவல்துறையினர் தெரிவித்தனர்.சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்மேட்டில் புதையுண்ட ஐவரும் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் அதே பகுதியில் மண்மேடொன்று இடிந்து வீழ்ந்த நிலையில், அந்த மண்மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மற்றொரு மண்மேடு இடிந்து அவர்கள் மேல் வீழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Leave feedback about this