Radio Raaga Local News அழகான நகரம் எனும் தொனிப்பொருளில் அபிவிருத்தி செய்யப்பட்டவுள்ள ஹற்றன் நகரம்
Local News

அழகான நகரம் எனும் தொனிப்பொருளில் அபிவிருத்தி செய்யப்பட்டவுள்ள ஹற்றன் நகரம்

அழகான நகரம் எனும் தொனிப்பொருளில் அபிவிருத்தி செய்யப்பட்டவுள்ள அட்டன் நகர அபிவிருத்திக்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி தெரிவித்தார்.அட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் அசோக கருணாரத்ன ஏற்பாட்டில் நகரசபை மண்டபத்தில் நேற்று 12-01-2026 அட்டன் நகர வர்த்தகர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணன் கலைச்செல்வி, நகரசபை உறுப்பினர்கள், அட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் எம்.ஆர் நகர வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அட்டன் நகரம் அழகிய நகரமாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு 2026 ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முதற்கட்டமாக 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் மூன்றாண்டு திட்டமாக அட்டன் டிக்கோயா நகர அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.

முதற்கட்டமாக வீதியோர வடிகாலாமைப்பு பணி ஆரம்பமாகவுள்ளது.அந்த வகையில் அட்டன் பொது பஸ்தரிப்பிடத்திலிருந்து எம். ஆர் நகர் வரை 700 மீட்டர் தூரம் வடிகால் புனரமைப்பு பணி ஆரம்பமாகவுள்ளது அதே போல மல்லியப்பூ சந்தி முதல் அட்டன் பஸ்தரிப்பிடம் வரை வடிகாலமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டு அதன் பின்னர் மல்லியப்பூ சந்தி முதல் டிக்கோயா நகரம் வரை 06 கிலோ மீட்டர் தூரம் கார்பட் வீதியாக புனரமைக்கப்படும் வீதி அபிவிருத்தியின் போது இரண்டு வாகனங்கள் செல்லக்கூட்டிய, வாகனம் நிறுத்தக்கூடிய வகையில் அகளப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தினை முன்னெடுத்து அழகான நகரமாக அட்டன் நகரை அபிவிருத்தி செய்ய நகரசபை,மின்சாரசபை, பொலிஸார் , வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர வாழ் மக்கள், வர்த்தகர்கள் என அனைவரும் ஒன்றினைந்த செயற் திட்டமாகவே நகர அபிவிருத்தி முன்னெடுக்கப்படவுள்ளது.

தேர்தல் காலத்தில் நகர மக்களின் கோரிக்கைக்கு அமையவே அட்டன் நகர அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது. எனவே நகர வர்த்தக சமூகம் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version