Radio Raaga Sports ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான புள்ளிப் பட்டியல் வெளியீடு
Sports

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான புள்ளிப் பட்டியல் வெளியீடு

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின்படி, ஏ மற்றும் பி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அங்கம் வகிக்கும் அணிகளின் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, ஏ பிரிவில் இந்திய அணி, இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில், 4 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது.

பாகிஸ்தான், 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சிய அணி, 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஓமானிய அணி, இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் தோல்வி கண்டுள்ளது. இதனால் அந்த அணிக்கு புள்ளிகள் எதுவும் கிடைக்கவில்லை.

பி பிரிவில், இலங்கை அணி இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில், 4 புள்ளிகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற நிலையில் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

பங்களாதேஷ் அணி, 2 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியீட்டி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஹொங்கொங் அணி, இரண்டு போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் தோல்வி கண்டுள்ளது. இதனால் அந்த அணிக்கு புள்ளிகள் எதுவும் கிடைக்கவில்லை.

Exit mobile version