Radio Raaga Local News ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவரை பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது
Local News

ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவரை பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது

இரண்டு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட குற்றச்சாட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலிஎல உடுவரை 7 ம் கட்டை மேற் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவரை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒன்று மற்றும் இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் 6,7 வயதுடைய இரண்டு சிறுமிகளும் வீட்டில் தனிமையில் இருந்த போது தனது இரண்டு மகள்மாரையும் குறித்த நபரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாகவும் சிறுமியின் பெற்றோரினால் ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டமைக்கு அமையவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 6.6 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version