Radio Raaga Sports இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான்
Sports

இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான்

ஆசிய கிண்ண தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் நேற்று (27) மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 135 ஓட்டங்களை எடுத்தது.

அடுத்து துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவரில் 124 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றது.

ஆசிய கிண்ண வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. எனவே ஆசிய கிண்ண இறுதிப்போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version