Radio Raaga Local News உலக கிறிஸ்தவ மக்களால் இன்று புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகின்றது
Local News

உலக கிறிஸ்தவ மக்களால் இன்று புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகின்றது

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று புனித வெள்ளி சிறப்பு நாளை அனுஷ்டிக்கின்றனர். புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதையும் அவர் அனுபவித்த துன்பங்களையும் நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்படுகின்ற ஒரு விசேட நாளாகும். இந்நாள் உயிர்த்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை நிகழும். இது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்றும்அழைக்கப்படுகின்றது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு நிகழ்வை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கிறிஸ்தவ தேவாலயங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.பதில் காவல்துறை மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிகப்படியான யாத்திரிகர்கள் பிரவேசிக்க கூடிய இடங்களை அடையாளம் கண்டு அவ்விடங்களுக்கும் அவ்விடங்களைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாகாணங்களுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக்காவல்துறை அதிபர்கள் உள்ளிட்ட அனைத்து காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இந்த அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version