அம்பத்தலை முதல் தெஹிவளை வரை நீர்விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஏற்பட்ட திடீர் பழுதினால், கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (03) நீர்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நீர்விநியோகம் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது
• மொரட்டுவ
• ராவத்தை
• சொய்சாபுர
• ரத்மலானை
• கல்கிஸ்ஸை
• தெஹிவளை
• வெள்ளவத்தை
• பாமன்கடை
• முல்லேரியாவ
• கொலன்னாவ
மேலும், பத்தரமுல்லை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த நீர் அழுத்தம் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழுதடைந்த குழாயை சரிசெய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், இன்று நள்ளிரவுக்குள் (03) அனைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் மீண்டும் நீர்விநியோகம் வழமைக்குத் திரும்பும் எனவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
