Radio Raaga Local News Politics கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் மைத்திரி
Local News Politics

கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சட்டமூலம் முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது விதவை மனைவி மற்றும் ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜகத் விக்ரம ரத்ன சட்டமூலத்தை அங்கீகரித்து, அதில் கையொப்பமிட்டு சட்டமாக மாற்றினார்.

அதன்படி, குறித்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைகள் ரத்து செய்தல் சட்டமாக அமுல்படுத்தப்பட்டது.

Exit mobile version