Radio Raaga Local News Crime and Threats செம்மணியிலிருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள் இன்று காட்சிப்படுத்தப்படும்
Crime and Threats Local News

செம்மணியிலிருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள் இன்று காட்சிப்படுத்தப்படும்

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழிகளிலிருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காணும் வகையில், இன்றைய தினம் அவற்றை மக்களுக்குக் காட்சிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, இன்று பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணிவரை சித்துப்பாத்தி வளாகத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

இதன்போது, தமது உறவுகளைத் தொலைத்தவர்கள் எவ்வித அச்சமுமின்றி சித்துப்பாத்தி வளாகத்துக்குச் சென்று, அடையாளங்களை உறுதிப்படுத்த முடியும் எனப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வீ.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இதனிடையே, சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் இரண்டாவது நாளாக இன்றைய தினமும் ஸ்கேன் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டதன் பின்னர் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் மேலதிக நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

Exit mobile version