நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் சற்று முன்னர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
படப்பிடிப்பின் போது திடீர் என மயங்கி வீழ்ந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை நடிகராகவும் திரையுலகில் வலம் வந்த ரோபோ சங்கரின் மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
