நுவரெலியா – நானுஓயா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைய, குறித்த ஆசிரியரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக நானுஓயா காவல்துறையினர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தனர்.
அத்துடன், தாக்கப்பட்ட மாணவியும் அவரது தாயுமே காவல் நிலையத்தில் முறைப்பாடளித்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இந்தநிலையில், குறித்த பாடசாலையின் அதிபரைத்தொடர்பு கொண்டு வினவியது.அதற்கு பதிலளித்த அதிபர், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
