Radio Raaga Local News நானு ஓயாவில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்
Local News விபத்துகள்

நானு ஓயாவில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்

மாத்தறையிலிருந்து, நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி, நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நானுஓயா காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில், நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில், இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக, வேன் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version