நைஜீரியாவின் சோகோட்டோ (Sokoto ) மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காணாமல் போயுள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள பிரபலமான சந்தைக்குப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து இடம்பெற்ற போது குறித்த படகில் 50 பேர் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பத்து பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் கடந்த வாரம் 100 பேர் பயணித்த படகொன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் வரை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது
