நேற்று இரவு பண்டாரவளை பகுதியில் ரிவால்வ்வர் ரக துப்பாக்கி ஒன்றும் அத் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 28 தோட்டாக்களும் சிறிய பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றும் குறித்த பிஸ்டல் ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு தோட்டாக்களும் இரண்டு கத்திகளும் மீட்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பிரதேச பொலீசார் தெரிவித்தனர்.
பண்டாரவளை குற்றத்தடுப்பு பிரிவு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய எக்டன்வத்தை பண்டாரவளையில் அமைந்துள்ள வீடொன்றை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது குறித்த வீட்டில் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்குறிப்பிடப்பட்ட வகை துப்பாக்கிகள் பண்டாரவளை பொலீஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
