Radio Raaga Local News பலத்த மின்னல் குறித்து வௌியான எச்சரிக்கை
Local News

பலத்த மின்னல் குறித்து வௌியான எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (14) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னலினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version