Radio Raaga Local News பலாங்கொடை நன்பேரியல் வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, 1000 ஏக்கரை மீறிய வனப்பகுதி எரிந்து சேதமடைந்துள்ளது.
Local News

பலாங்கொடை நன்பேரியல் வனப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, 1000 ஏக்கரை மீறிய வனப்பகுதி எரிந்து சேதமடைந்துள்ளது.

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீயை அணைக்கும் பணிகளில் இலங்கை இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக பரவி வரும் இந்த காட்டுத்தீயால், 1000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பரப்புகள் தீக்கிரையாகியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியில் நிலவும் வரட்சி நிலையும், பலத்த காற்றின் தாக்கமும் காரணமாக தீயணைப்பு நடவடிக்கைகள் சவாலாக மாறியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை அடுத்து, இராணுவத்தினரும், காவல்துறையினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும், உள்ளூர் மக்களும் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version