Radio Raaga Local News Weather புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை
Local News Weather

புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (19) மாலை 4:00 மணி முதல் நாளை (20) மாலை 4:00 மணி வரை பின்வரும் பகுதிகளில் இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, முதல் நிலை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளின் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டம்: – ஹல்துமுல்ல – பசறை

காலி மாவட்டம்: – நாகொட – எல்பிட்டிய – நெலுவ

கண்டி மாவட்டம்: – உடுநுவர – உடுதும்பர

கேகாலை மாவட்டம்:- மாவனெல்லை – ருவன்வெல்ல – அரநாயக்க – ரம்புக்கன – கேகாலை – புலத்கொஹுபிட்டிய – யட்டியந்தோட்டை – கலிகமுவ

மாத்தளை மாவட்டம்: – ரத்தோட்ட – யடவத்தை – உக்குவெல – பல்லேபொல – அம்பன்கங்க கோரல – லக்கல – நாவுல

நுவரெலியா மாவட்டம்: – அம்பகமுவ – ஹங்குரன்கெத்த – வலப்பனை

இரத்தினபுரி மாவட்டம்: – கலவானை – இம்புல்பே – எஹெலியகொடை – இரத்தினபுரி

Exit mobile version