Radio Raaga Local News பொரள்ளையில் தாழிறங்கிய வீதி..! மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள்…!
Local News

பொரள்ளையில் தாழிறங்கிய வீதி..! மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள்…!

பொரளை பொலிஸ் பிரிவின் மொடல் ஃபார்ம் சந்திக்கு அருகிலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையான கொழும்பு செல்லும் வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி, மொடல் ஃபார்ம் சந்தி வழியாக கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் மொடல் ஃபார்ம் சந்தியிலிருந்து பொரளை மயானம் சுற்றுவட்டத்தை நோக்கிச் சென்று பேஸ்லைன் வீதிக்குள் நுழைய முடியும்.

மேலும், இராஜகிரியவிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் ஆயுர்வேத சுற்றுவட்டத்திலிருந்து கோட்டே வீதி வழியாக கொழும்புக்குள் நுழைய முடியும்.

கொழும்பிலிருந்து மொடல் ஃபார்ம் சந்தி வழியாக ஸ்ரீ ஜவர்தனபுர வீதியை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டி.எஸ். சேனநாயக்க சந்தியில் இடதுபுறம் திரும்பி, பொரளை சந்தி வழியாக கோட்டே வீதி ஊடாக ஸ்ரீ ஜவர்தனபுர வீதிக்குள் நுழைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version