சமூகத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கிலும் வாழும் சூழலை சிறந்த சூழலாக உருவாக்குவதற்காகவும் “மறுமலர்ச்சி நகரம் என்ற தொலைநோக்குத் திட்டம்” இன்று கொத்மலையில் நடைபெறுகிறது.
பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி வாரத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கமைய, இன்று (15) முதல் 21 ஆம் திகதி வரையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொத்மலை பிரதேச சபை அறிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி கொத்மலை மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெறுகிறது.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் கொத்மலை பிரதேசசபை நிர்வாக பகுதியை உள்ளடக்கியதாக 45 திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்த நடமாடல் சேவை வேலைத்திட்டத்தின் மூலம் தொழில் வாய்ப்புக்களுக்கான வேலைத்திட்டம், இரத்த அழுத்த பரிசோதனை, வரிப்பணக் கட்டணம், நீர்க் கட்டணம், கழிவுக் கட்டணம் செலுத்துவதற்கான வாய்ப்பு, பிறப்பு இறப்பு மற்றும் திருமணம் சான்றிதழ்களை வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
