Radio Raaga Local News மின்கம்பிகள் சேதம்: குவைத் பகுதிகளில் மின்சாரம் முடக்கம்
Local News

மின்கம்பிகள் சேதம்: குவைத் பகுதிகளில் மின்சாரம் முடக்கம்

குவைத்தில் வான்வழி தடுப்பு நடவடிக்கையின்போது விழுந்த சிதைவுகளால் ஏழு மேல் மின்பரிமாற்ற கேபிள்கள் செயலிழந்துள்ளதாக மின்சாரம் மற்றும் நீர்வள அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அதிகாலை தெரிவித்தது.

இந்த சம்பவத்தால் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும், மின்சாரத்தை விரைவாக மீட்டெடுக்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.பாதிக்கப்பட்ட இடங்கள் பாதுகாப்பாக உறுதிசெய்யப்பட்டதும், பராமரிப்பு பணிகளுக்கான ஆய்வை தொழில்நுட்ப குழுக்கள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version