Radio Raaga Local News முந்தல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி
Local News

முந்தல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் உயிரிழந்தனர். குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version