2026 ஜனவரி 1 முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அரசாங்கம் மற்றும் தோட்ட நிறுவனங்களுக்கு இடையே கடந்த ஜனவரி 30 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும், இந்த சம்பள உயர்வை வழங்குவதில் தற்போது சிக்கல்கள் எழுந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.
தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு 1,750 ரூபா சம்பளத்தை வழங்க வேண்டுமானால், ஒரு நாளைக்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை 20 கிலோவிலிருந்து 25 கிலோவாக உயர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிபந்தனையால் தொழிலாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.பணி இடைநிறுத்தம்: மஸ்கெலியா பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் இன்று ஏழு தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தினரால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய சம்பளத் திட்டத்தின்படி, அடிப்படைச் சம்பளமான 1,550 ரூபாவில் 200 ரூபாவை தோட்ட நிறுவனங்களும், எஞ்சிய 200 ரூபாவை அரசாங்கமும் (வருகை ஊக்கத்தொகையாக) வழங்க வேண்டும். இதற்காக அரசாங்கம் 5,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.சம்பளம் வழங்கப்படும் திகதி: இம்மாதம் 10-ம் திகதி தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தோட்ட நிறுவனங்களின் புதிய நிபந்தனைகளால் அது முறையாகக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதே வேலை இன்றைய தினம் ஹேவாஹேட்ட முல்லோயா மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
