கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
சிறை வைத்தியசாலையில் கிடைக்கப்பெறாத சிறப்பு சிகிச்சை அவரது உடல்நிலைக்குத் தேவை என்று மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் தெரியவந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்ட விக்கிரமசிங்க, பல உடல்நலக் கோளாறுகளைக் குறிப்பிட்டு முதலில் சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது பதவிக்காலத்தில் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன இதனை உறுதிப்படுத்தினார்.
வைத்தியர்களின் ஆலோனைக்கமைய, ரணில் விக்ரமசிங்க தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
