Radio Raaga Local News வரண்ட வானிலை தொடர்ச்சி: நுவரெலியாவில் உறைபனி அபாயம்
Local News

வரண்ட வானிலை தொடர்ச்சி: நுவரெலியாவில் உறைபனி அபாயம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (18) வரண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும், சில மாவட்டங்களில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டம் மற்றும் உறைபனி ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று காலை வேளையில் உறைபனி (Ground Frost) ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. கிழக்கு, சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காலை வேளையில் கடும் பனிமூட்டமான (Misty) வானிலை நிலவக்கூடும்.

மத்திய மலைநாடு மற்றும் பனிமூட்டம் நிலவும் பகுதிகளின் ஊடாகப் பயணம் செய்யும் வாகனச் சாரதிகள், போதிய வெளிச்சமின்மை காரணமாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக, மலைப்பாங்கான வீதிகளில் நிலவும் பனிமூட்டம் தொடர்பில் காவல்துறை போக்குவரத்துப் பிரிவினரும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்

Exit mobile version