காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவது தொடர்பில் சபாநாயகர் அனுப்பிய கடிதத்துக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அனுமதி வழங்கியுள்ளார்.
தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான யோசனை நேற்று நாடாளுமன்றத்தில் 177 வாக்குகளால் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தின்படி, தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை கோரி சபாநாயகர், ஜனாதிபதி கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
