Radio Raaga Local News 500 அடி உயரப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – பலி எண்ணிக்கை 10 பேராக உயர்வு 15 பேர் மருத்துவமனையில்
Local News விபத்துகள்

500 அடி உயரப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – பலி எண்ணிக்கை 10 பேராக உயர்வு 15 பேர் மருத்துவமனையில்

எல்ல-வெல்லவாய சாலையில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

எல்ல – வெல்லவாய வீதியில் இன்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் பேருந்து கவிழ்ந்து சுமார் 500 மீட்டர் பள்ளத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தங்காலையில் இருந்து எல்லவிற்கு சுற்றுலா குழுவொன்று மீண்டும் தங்காலையில் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Exit mobile version