Radio Raaga Local News 6வது நாளாக தொடரும் தபால் வேலைநிறுத்தம்
Local News

6வது நாளாக தொடரும் தபால் வேலைநிறுத்தம்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடருகிறது.

இந்த நிலையில், பணிப்புறக்கணிப்பின் விளைவாக, மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் தேங்கியுள்ள ஏராளமான பொதிகள், காவல்துறையின் உதவியுடன் இலங்கை இராணுவத்தால் நேற்று விநியோகிக்கப்பட்டுள்ளன.

மத்திய அஞ்சல் பரிமாற்ற வளாகத்தில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி, இந்தப் பொதிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

Exit mobile version