Radio Raaga Sports SA20 தொடருக்கான ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டெவால்ட் ப்ரேவிஸ்!
Sports

SA20 தொடருக்கான ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டெவால்ட் ப்ரேவிஸ்!

தென்னாபிரிக்க அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான டெவால்ட் ப்ரேவிஸ், SA20 தொடருக்கான ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக பதிவாகியுள்ளார்.

இதன்படி அவரை பிரிட்டோரியா கெப்பிடல்ஸ் அணி R16.5 மில்லியனுக்கு (தென்னாப்பிரிக்க ராண்ட்) வாங்கியுள்ளது.

22 வயதான டெவால்ட் ப்ரேவிஸ், அண்மைக்காலமாக உலகின் மிகச்சிறந்த இளம் துடுப்பாட்ட வீரராக வளம் வருகின்றார்.இவரை ஏலத்தில் எடுப்பதற்காக பிரிட்டோரியா கெப்பிடல்ஸ், பார்ல் ரோயல்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் MI கேப் டவுன் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.

இந்தநிலையில் கடுமையான போட்டிக்கு மத்தியில் டெவால்ட் ப்ரேவிஸை பிரிட்டோரியா கெப்பிடல்ஸ் அணி வாங்கியது.

தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் விளையாடி ப்ரேவிஸ், கடந்த ஒகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 56 பந்துகளில் 125 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

அத்துடன் கடந்த ஐபிஎல் தொடரின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய டெவால்ட் ப்ரேவிஸ் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version