Radio Raaga Local News VAT வரி வசூல் இன்று முதல் நிறுத்தம்
Local News

VAT வரி வசூல் இன்று முதல் நிறுத்தம்

இன்று முதல் எளிமைப்படுத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரி (SVAT) முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ரத்துச் செயல் காரணமாக, VAT மீளப்பெறும் நடைமுறைக்கு உரிய ஒழுங்கு அமையாததால், பல சிக்கல்கள் உருவாகியுள்ளன என ஏற்றுமதியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

செயற்பாட்டு நிதியை மீளப்பெறும் வழி இன்றி, எளிமைப்படுத்தப்பட்ட வரி திட்டம் நீக்கப்பட்டிருப்பது, இலங்கை ஏற்றுமதி தொழில்துறைக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், சிறு தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரம், நாட்டின் ஏற்றுமதி போட்டித் திறன், அத்துடன் அந்நியச் செலாவணி வருவாய் ஆகியவை பெரும் சவாலுக்கு உள்ளாகும் என இறப்பர் வர்த்தகர் சங்கம் எச்சரித்துள்ளது.

Exit mobile version