மஹியங்கனையில் பேருந்து விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேர் காயம்.

மஹியங்கனை – திஸ்ஸபுர PTS சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (25) காலை இடம்பெற்றதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்திருந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

Read More

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிபவர்கள் உன்னிப்பாக அவதானிக்கப்படுவர்; பொலிஸ் தலைமையகம்

முகத்தை முழுமையாக மறைக்கும் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்திருப்பவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து ஆய்வு செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச் சம்பவங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சந்தேக நபர்கள் தங்கள் அடையாளங்களை மறைக்க முழு முகக் கவசங்களைப் பயன்படுத்தியுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளின் போது அடையாளம் காணப்படுவதைத் தவிர்க்க குற்றவாளிகள் இவ்வாறான உபகரணங்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதை இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள்…

Read More

வத்திக்கானுக்கு பயணமானார் கார்டினல் மெல்கம் ரஞ்சித்.

கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று (23) காலை 9:30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கார்டினல் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதாவது, காலமான புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடலுக்கு இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக அவர் பயணமாகியுள்ளார். புனித திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

Read More

சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் சடலமாக மீட்பு -சம்மாந்துறை பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு

இது தவிர மரணம் அடைந்தசிறுவனின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜெயலத் தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More