ஐ போன்களில் இடைநிறுத்தப்படவுள்ள வாட்ஸ்அப்!!!

எதிர்வரும் மே மாதம் முதல் பல ஐபோன் மொடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக செயலி இனி இயங்க மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐபோன் 5s, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன்ற ஐபோன் மொடல்கள் உள்ளிட்ட பழைய ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக வலையமைப்பு இனி இயங்க மாட்டாது. இந்நிலையில், iOS 15.1இற்கு முன்பு இருந்த மொபைல் போன் மொடலை புதிய இயக்க முறைமைக்கு புதுப்பிக்க முடியாவிட்டால், வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியாது என்றும்…

Read More

லிவர்பூல் அணி இங்கிலாந்து பிரீமியர் லீக் மகுடத்தை தனதாக்கியது

ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, ஆன்ஃபீல்டில் மைதானத்தில் லிவர்பூல் அணி இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது. லீக்கில் இன்னும் நான்கு போட்டிகள் மீதமுள்ள நிலையில் லிவர்பூலின் வெற்றி உறுதியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற டோட்டன்ஹாமுக்கு எதிரான போட்டியை சமன் செய்தாலே லிவர்பூல் அணி சம்பியன் ஆவதற்கு அது போதுமானதாக இருந்தது. இருப்பினும், லிவர்பூல் 5-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிகாரப்பூர்வமாக சம்பியன்களாக முடிசூட்டியது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் அணி டொமினிக் சோலங்கே…

Read More

கொள்கலன்கள் வெடித்ததில் ஈரானில் 500 பேர் காயம்..!

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டிடங்களும் சேதமடைந்துள்ள நிலையில் மக்கள் இடிபாடுகளுக்கு சிக்கியுள்ளனர். எவ்வாறாயினும் உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மூடப்படாத பல கொள்கலன்கள் வெடித்ததாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More