உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு வத்திக்கான் வழங்கியுள்ள அங்கீகாரம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரையும் ‘விசுவாசத்தின் நாயகர்கள்’ ( Heroes of Faith) என்று அறிவிக்க வத்திக்கான் முடிவு செய்துள்ளது.இதை அறிவிக்கும் அறிக்கையை வத்திக்கான் நேற்று (19) வெளியிட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து 6 ஆண்டுகள் ஆகியும், முந்தைய அரசாங்கங்கள் அவற்றின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளையோ அல்லது தாக்குதல்களில் ஈடுபட்டவர்களையோ கைது செய்யத் தவறிவிட்டதாக வத்திக்கானால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற சூழலில், தாக்குதலில் இறந்த 300க்கும் மேற்பட்டவர்களை ‘விசுவாச நாயகர்கள்’ என்று அறிவிக்க…

Read More

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்; ஒருவர் கைது

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம், சித்தாா்கோட்டை பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படவிருப்பதாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் தாரிக்குள் அமீன், கதிரவன், நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா்…

Read More

பிள்ளையானின் நெருக்கமான சகா ஒருவர், அவரின் சுயவிருப்பின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

ஆட்கடத்தல் சம்பவம் ஒன்றுக்காக கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நெருக்கமான சகா ஒருவர் , தனது சுயவிருப்பின்பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருக்கிறார்.கொழும்பில் ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஆனந்த விஜேபால , கம்மன்பில – பிள்ளையான் சந்திப்பின்போது பிள்ளையான அழவில்லை என்றும் அந்த சந்திப்பின்போது அருகில் இருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் தான் இதனை வினவியதாகவும் தெரிவித்திருக்கிறார்.ஈஸ்ரர் ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த…

Read More

உலக கிறிஸ்தவ மக்களால் இன்று புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகின்றது

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று புனித வெள்ளி சிறப்பு நாளை அனுஷ்டிக்கின்றனர். புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதையும் அவர் அனுபவித்த துன்பங்களையும் நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்படுகின்ற ஒரு விசேட நாளாகும். இந்நாள் உயிர்த்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை நிகழும். இது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்றும்அழைக்கப்படுகின்றது. இதேவேளை உயிர்த்த ஞாயிறு நிகழ்வை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி…

Read More

அஹுங்கல்லை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு

அஹுங்கல்லவில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து 28 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளார்.காயமடைந்த நபர் பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் புலனாய்வுத் துறையினர் – ரொஹான் சில்வா

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் புலனாய்வுத் துறையினர் – ரொஹான் சில்வா ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத் துறையினால் இருப்பது தெரியவந்துள்ளதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரோஹான் சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வுத் துறையினர் ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் இருக்கின்றார்கள், தாக்குதல்களை மேற்கொண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணினார்கள் என்பது விசாரணை அறிக்கைகள் ஊடாக…

Read More