Headlines

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை கடும் வெப்பம்

மத்திய மாகாணம் மற்றும் கேகாலை மற்றும் பதுளை மாவட்டங்கள் தவிர, நாளை (21) அனைத்து பகுதிகளிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த சூழ்நிலையின் விளைவுகளைக் குறைக்க, போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்,…

Read More

கழிப்பறையை காவல் காத்து மகனுக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்த தந்தை!

ஒரு கழிப்பறையைப் பாதுகாத்து மகனுக்காக கிரிக்கெட் விளையாடிய தந்தை!“என் மகன் இப்போது என் சொந்த மகன் மட்டுமல்ல, இப்போது முழு பீகாருக்கும் ஒரு மகன்”“நான் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் என் மகன் தரையில் அடியெடுத்து வைப்பதைப் பார்க்க விரும்புகிறேன். ஐபிஎல் ஏலத்தின் போது நான் மகனை அழைத்தேன், அவற்றில் ஒன்றை உங்கள் தலையில் வைத்துக் கொள்ளாதே என்று சொன்னேன். நீங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. “உலக கிரிக்கெட் களத்தில் மிகப்பெரிய பட்டமாக மாறிய வைபவ்…

Read More

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்கையின் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த வெளிநாட்டவரை, சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.சந்தேக நபர் 59 வயதான பிரேசில் நாட்டை சேர்ந்த ஆசிரியர் என தெரியவந்துள்ளது.240 மில்லியன் ரூபா பெறுமதியான 4 கிலோகிராம் 855 கிராம் கொக்கையின் பிரேசிலில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.இவை அட்டைப் பெட்டியில் ஒட்டப்பட்டு, கறுப்பு காகிதத்தால் மூடப்பட்டு அவரது சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர் பிரேசிலில் இருந்து கட்டார் சென்று, இன்று அதிகாலை 2.40 மணிக்கு டோஹாவிலிருந்து…

Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு வத்திக்கான் வழங்கியுள்ள அங்கீகாரம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரையும் ‘விசுவாசத்தின் நாயகர்கள்’ ( Heroes of Faith) என்று அறிவிக்க வத்திக்கான் முடிவு செய்துள்ளது.இதை அறிவிக்கும் அறிக்கையை வத்திக்கான் நேற்று (19) வெளியிட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து 6 ஆண்டுகள் ஆகியும், முந்தைய அரசாங்கங்கள் அவற்றின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளையோ அல்லது தாக்குதல்களில் ஈடுபட்டவர்களையோ கைது செய்யத் தவறிவிட்டதாக வத்திக்கானால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற சூழலில், தாக்குதலில் இறந்த 300க்கும் மேற்பட்டவர்களை ‘விசுவாச நாயகர்கள்’ என்று அறிவிக்க…

Read More

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அருகில் பொலிஸ், இராணுவ பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக அனைத்து பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அண்மையில் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.இதன்படி, விசேடமாகப் பிரதான ஆராதனைகள் நடைபெறும்…

Read More

குற்றமிழைத்தவர்களுக்கு உரிய வகையில் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் ஜனாதிபதி

முழு நாடும் எதிர்பார்க்கும் விசாரணைகள் மிகவும் சூட்சமமாக நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.நேற்று பதுளைப் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். குறித்த விசாரணைகளை நிறைவு செய்ய காலதாமதம் ஆகலாம் என்றாலும் நீதியை நிலை நாட்டுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பரில் எமது அரசாங்கம் இரண்டாவது பாதீட்டை சமர்ப்பிக்க எதிர்பார்த்து உள்ளோம்.அதில் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம். தற்போது நிதி…

Read More

வாக்குறிதியளித்த வளமான நாடும் அழகான வாழ்க்கையும் எங்கே? சஜித் பிரேமதாச கேள்வி.

வாக்குறுதியளித்த வளமான நாடும், அழகான வாழ்க்கையும் எங்கே?வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. இன்று பலர் இந்த அரசாங்கத்தை பொய் கூறும் அரசாங்கம் என்றும், ஏமாற்று அரசாங்கம் என்றும், கேவலமான அரசியலில் ஈடுபடும் அரசாங்கம் என்றும் கூறுகின்றனர். 24 மணி நேரமும் பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம் மக்களை திசைதிருப்பி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.எதிர்வரும்…

Read More

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்; ஒருவர் கைது

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம், சித்தாா்கோட்டை பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படவிருப்பதாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் தாரிக்குள் அமீன், கதிரவன், நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா்…

Read More

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிக வெப்பம்

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (19) கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை 39 முதல் 45 வெப்பநிலை வரை இருக்கும் எனவும் இதனால் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை, சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலனறுவை, ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் கிளிநொச்சி…

Read More

பாதாள உலகம் போதைப்பொருள் கடத்தலுடன் அரசியல்வாதிகளின் தொடர்பு இரகசியமானது அல்ல

பாதாள உலக நடவடிக்கைகளும் போதைப்பொருள் கடத்தலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பது இரகசியமல்ல என்றும் சில அரசியல்வாதிகள் இதற்கு பங்களித்துள்ளனர் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.பாதாள உலக நடவடிக்கைகளை குறுகிய காலத்தில் முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் பொதுமக்கள் அச்சம் மற்றும் சந்தேகமின்றி வாழ்வதற்கு தேவையான சூழல் விரைவாக உருவாக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டு மாதங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் பாதாள உலகக் கும்பல் கைது செய்யப்பட்டுமுள்ளனர்.ஆயுதப் படைகளில்…

Read More