
குற்றமிழைத்தவர்களுக்கு உரிய வகையில் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் ஜனாதிபதி
முழு நாடும் எதிர்பார்க்கும் விசாரணைகள் மிகவும் சூட்சமமாக நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.நேற்று பதுளைப் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். குறித்த விசாரணைகளை நிறைவு செய்ய காலதாமதம் ஆகலாம் என்றாலும் நீதியை நிலை நாட்டுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பரில் எமது அரசாங்கம் இரண்டாவது பாதீட்டை சமர்ப்பிக்க எதிர்பார்த்து உள்ளோம்.அதில் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய எதிர்பார்த்துள்ளோம். தற்போது நிதி…