சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். குறிப்பாக, தமிழில் இந்த ஆண்டில் மட்டும் அஜித்துக்கு ஜோடியாக அவர் நடித்த விடாமுயற்சி மற்றும் குட்பேட் அக்லி என்ற இரண்டு படங்கள் திரைக்கு வந்துள்ளன.
அதேபோல் மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடன் நடித்த ஐடென்டிட்டி என்ற படம் இந்த ஆண்டு ஜனவரியில் திரைக்கு வந்தது.இந்த நிலையில், தற்போது தனது இணைய பக்கத்தில் அடுத்தடுத்து தனது நடிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் திரிஷா. அதில், தக்லைப், சூர்யா- 45 , விஸ்வாம்பரா போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன.இந்த படங்களில் மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் தக்லைப் படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து, சூர்யா- 45 வது படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ள விஸ்வாம்பரா இன்னும் இரண்டு மாதங்களில் திரைக்கு வருகிறது.
அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் திரிஷா கதாநாயகியாக நடித்து இதுவரை மூன்று படங்கள் திரைக்கு வந்துள்ள நிலையில், அடுத்தபடியாக இன்னும் மூன்று படங்கள் திரைக்கு வரப்போகின்றன.