ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு சச்சின் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் பிபாஷா பாசு ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு “சச்சின்” திரைப்படம் மீண்டும் கடந்த பதினெட்டாம் திகதி திரைக்கு வந்தது. உலக அளவில் 300 திரையரங்குகளில் வெளியான சச்சின் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் 12 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது இந்த வார இறுதிக்குள் மேலும் 10 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.