தலதா வழிபாடு நிகழ்ச்சியை 27 ஆந் திகதியுடன் நிறைவு செய்யத் தீர்மானம்!

திட்டமிட்டபடி ஏப்ரல் 27ஆம் திகதி ‘தலதா வழிபாடு’ நிகழ்ச்சியை நிறைவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்தார். இன்று (25) பிற்பகல் விசேட அறிக்கையொன்றை விடுத்த போதே தியவதன நிலமே இவ்வாறு தெரிவித்தார். இந்த திகதி நீடிக்கப்படலாம் என்ற கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்நாட்டு பௌத்தர்களின் சிகரமாக விளங்கும் பெருமதிப்புக்குரிய ஸ்ரீ தலதாவை தரிசிக்கும் பெரும் வாய்ப்பு கடந்த 18ஆம் திகதி தொடக்கம் இலங்கையர்களுக்குக் கிடைத்தது. இந்த திகதியை…

Read More

மஹியங்கனையில் பேருந்து விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட 28 பேர் காயம்.

மஹியங்கனை – திஸ்ஸபுர PTS சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (25) காலை இடம்பெற்றதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்திருந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

Read More

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிபவர்கள் உன்னிப்பாக அவதானிக்கப்படுவர்; பொலிஸ் தலைமையகம்

முகத்தை முழுமையாக மறைக்கும் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்திருப்பவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து ஆய்வு செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச் சம்பவங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சந்தேக நபர்கள் தங்கள் அடையாளங்களை மறைக்க முழு முகக் கவசங்களைப் பயன்படுத்தியுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளின் போது அடையாளம் காணப்படுவதைத் தவிர்க்க குற்றவாளிகள் இவ்வாறான உபகரணங்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதை இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுவதாக பாதுகாப்பு வட்டாரங்கள்…

Read More

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

2025 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (24) காலை ஆரம்பமாகியது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்று (24) நாளை (25) மற்றும் 28, 29ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு இடம்பெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூத்தியாகியுள்ளதுடன், வாக்கு பெட்டிகளும் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக…

Read More

நடிகர் அஜித் இப்படிப்பட்டவரா? 90ஸ் நடிகை சொன்ன தகவல்

நடிகர் அஜித் குறித்து திரையுலகில் உள்ள பலரும் தங்களது கருத்துக்களை பகிர்வார்கள். அதே போல் அவருடன் பணியாற்றிய பலரும் அவர் எப்படி என்பது குறித்து பேட்டிகளில் கூறியுள்ளனர். இந்த நிலையில், அஜித்துடன் உல்லாசம் திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை மஹேஸ்வரி சமீபத்திய பேட்டியில் அஜித் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது “அஜித் சார் ஒரு ஜென்டில்மேன். அவர் க்யூட், அழகு, சூப்பர்ஸ்டார் என்பதை விட, நல்ல மனிதர். அவர் கலாச்சாரம் தெரிந்து, நன்கு வளர்க்கப்பட்ட ஒருத்தர்….

Read More

வத்திக்கானுக்கு பயணமானார் கார்டினல் மெல்கம் ரஞ்சித்.

கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று (23) காலை 9:30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கார்டினல் ஆண்டகை வத்திக்கானுக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதாவது, காலமான புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடலுக்கு இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக அவர் பயணமாகியுள்ளார். புனித திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

Read More

சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் சடலமாக மீட்பு -சம்மாந்துறை பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு

இது தவிர மரணம் அடைந்தசிறுவனின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜெயலத் தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

டோன் பிரியசாத் கொலை; மூவர் கைது

சமூக ஆர்வலர் டோன் பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக 06 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பாதாள உலக குழுவின் தலைவரும் போதைப்பொருள் வர்த்தகரும் என கருதப்படும் கஞ்சிபானை இம்ரானுடன் தொடர்புடையவர்கள் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வெல்லம்பிட்டிய – சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர்…

Read More

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை ஆய்வு செய்ய விசேட குழு

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 67,000 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஆய்வுசெய்ய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவின் தலைமையில் நால்வர் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.மேலும், இந்த குழு பிரதான குழுவாக செயற்படும் என்பதுடன் இதனுடன் இணைந்த வகையில் மேலும் சில உபக் குழுக்களும் நியமிக்கப் பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.இது…

Read More

பொரளையில் மரம் முறிந்து விழுந்ததில் 7 வாகனங்கள் சேதம்

பொரளை கனத்தை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில், விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்து செயற்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Read More