19 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான மின்னல் தாக்க எச்சரிக்கை

கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய, வடக்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 28) இரவு 11.00 மணி வரை வானிலை முன்னறிவிப்பு அமுலில் இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரித்துள்ள திணைக்களம், மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு…

Read More

லிவர்பூல் அணி இங்கிலாந்து பிரீமியர் லீக் மகுடத்தை தனதாக்கியது

ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, ஆன்ஃபீல்டில் மைதானத்தில் லிவர்பூல் அணி இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது. லீக்கில் இன்னும் நான்கு போட்டிகள் மீதமுள்ள நிலையில் லிவர்பூலின் வெற்றி உறுதியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற டோட்டன்ஹாமுக்கு எதிரான போட்டியை சமன் செய்தாலே லிவர்பூல் அணி சம்பியன் ஆவதற்கு அது போதுமானதாக இருந்தது. இருப்பினும், லிவர்பூல் 5-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிகாரப்பூர்வமாக சம்பியன்களாக முடிசூட்டியது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் அணி டொமினிக் சோலங்கே…

Read More

சாட்சியம் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்திற்கு அழைப்பு

கடந்த 2008ஆம் ஆண்டு பொரலஸ்கமுவவில் இடம் பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கின் சாட்சியான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சாட்சியம் இன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. அக்டோபர் மாதம் 10ஆம் திகதி 2008 ஆம் ஆண்டு விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொல்லும் நோக்கில் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உதவியாக இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னர்…

Read More

விசாரணையின்றி தள்ளுபடி – பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுக்காமலேயே தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் முகமது லாபர் தாஹிர் மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த சம்பவம்…

Read More

இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்பு குழு

GSP+ வர்த்தக விருப்பத்தேர்வுகளை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்த முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவொன்று இன்று (28) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு இன்று 28 முதல் மே மாதம் 7ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி தங்களது பணிகளை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் மற்றும் பல தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024…

Read More

நானு ஓயாவில் பொன்னர் சங்கர் நாடகத்தின் போது தவறி விழுந்து உயிரிழந்த கலைஞர்.

நானுஓயாவில் பொன்னர் சங்கர் நாடகத்தில் கம்ப மரம் ஏறும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு. நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ தோட்டத்தில் தமிழர் வரலாற்றை கூறும் பொன்னர் சங்கர் நாடகத்தில் இன்று அதிகாலை (27) ஞாயிற்றுக்கிழமை 60 அடி உயரம் கொண்ட கம்ப மரத்தில் ஏறும் போது தவறி விழுந்தவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் நானுஓயா கிளாசோ தோட்டத்தைச் சேர்ந்த முருகன் சதாசிவம் (வயது 63) என்பவர் எனவும் இவர் பொன்னர்…

Read More

கொள்கலன்கள் வெடித்ததில் ஈரானில் 500 பேர் காயம்..!

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கட்டிடங்களும் சேதமடைந்துள்ள நிலையில் மக்கள் இடிபாடுகளுக்கு சிக்கியுள்ளனர். எவ்வாறாயினும் உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மூடப்படாத பல கொள்கலன்கள் வெடித்ததாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More

பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு இன்று..!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இன்று ரோமின் சென் பீட்டர் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி முற்பகல் 10.00 மணிக்கு இறுதிச் சடங்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் பாப்பரசர் பிரான்சிஸ் பூதவுடல் சென் மேரி தேவாலயத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உட்பட பல உலகத் தலைவர்களும், பல நாடுகளின் விஷேட பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர். இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்…

Read More

இன்றைய நாள் இலங்கையில் தேசிய துக்க தினமாக பிரகடனம்;

அரசாங்கம் இன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று நடைபெறவுள்ளது. இதனையொட்டி இலங்கையில் தேசிய துக்க தினமாக இன்றைய தினத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More