devaruckshan devaruckshan

பொரளையில் மரம் முறிந்து விழுந்ததில் 7 வாகனங்கள் சேதம்

பொரளை கனத்தை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில், விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்து செயற்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Read More

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யலாம்

இன்று (23) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் கன மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழையின்…

Read More

எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு துறைகளில் இலங்கைக்கு முன்னுரிமை.

இலங்கையுடனான நீண்டகால உறவுகளை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஐக்கிய அரபு எமீரகத்தின் உப பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீட் அல் நஹியான் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உப பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீட் அல் நஹியான் தலைமையிலான குழுவினர், இன்று (22) ஜனாதிபதி…

Read More

துப்பாக்கி சூட்டில் டான் பிரியசாத் பலி

இன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் டான் பிரசாத் கொல்லப்பட்டுள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.மீதொட்டுமுல்ல குடியிருப்பில் மோட்டார் பைக்கில் வந்த இருவரினால் #பிஸ்டல் மூலம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் டான் பிரியசாத் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Read More

நான்கு நாட்களில் சச்சின் திரைப்படம் செய்துள்ள வசூல்

ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு சச்சின் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் பிபாஷா பாசு ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு “சச்சின்” திரைப்படம் மீண்டும் கடந்த பதினெட்டாம் திகதி திரைக்கு வந்தது. உலக அளவில் 300 திரையரங்குகளில் வெளியான சச்சின் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் 12 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது இந்த வார இறுதிக்குள்…

Read More

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பு – காரணம் என்ன!

இலங்கையில் இந்த வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 60,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல், ஆபரணங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கையால் கடந்த வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 15,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சபையின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.ஒரு வார காலப்பகுதியில் மட்டும் தங்கத்தின் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த வருடத்தின் 4 மாதங்களில் 60000 ரூபாய் வரை தங்கத்தின் விலை அதிகரிப்பதற்கு பிரதான காரணமாக உலக…

Read More

வத்திமிராஜபுர கால்வாய் புனரமைப்புக்கு 2 கோடி 89 இலட்சம்; பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி

பேருவளை மருதானை வத்திமிராஜபுர கால்வாய் புனரமைப்பு பணிக்காக 2 கோடி 89 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாரச்சி தெரிவித்தார். இந்த கால்வாய் புனரமைப்பு வேலைகள் இம்மாதம் 24ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சீனங்கோட்டையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசும் போது இதனை தெரிவித்தார். பேருவளை நகரசபை பகுதியில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையாக வத்திமிராஜபுர கால்வாய் திகழ்கிறது. இந்த கால்வாயை புனரமைத்து சிறந்த சுற்றாடலுடன் கூடிய பகுதியாக மாற்றியமைப்போம். இப்பகுதி வாழ் மக்கள்…

Read More

புனித பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

புனித பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் இன்று (21) காலமானார் .சுகயீனமுற்று அண்மையில் நலம் பெற்றிருந்த பாப்பரசர் ,ஈஸ்ரர் தின ஆராதனையிலும் கலந்துகொண்டிருந்தார். லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசர் ஆன அவர் 12 ஆண்டுகள் இரைச்சவையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி; எதிர்க்கட்சிகள் விஷேட பேச்சு, கொள்கையளவில் இணக்கம்

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் நிறைவின் பின் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைப்பது குறித்து எதிர்க்கட்சிகள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன. இது தொடர்பாக இடம்பெற்ற முதற் கட்ட பேச்சுவார்த்தையின் போது சகல எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசைக் கட்டுப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அரசியல் பிரமுகரொருவர் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அதிகமான சபைகளில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரம் கிடைக்காதென எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. எனவே தான்…

Read More