பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் லேசான மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான…

Read More

அஹுங்கல்லை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு

அஹுங்கல்லவில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து 28 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றுள்ளார்.காயமடைந்த நபர் பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

K2 – 18b எனும் புதிய கோளில் உயிர்கள் வாழக் கூடியதற்கான வலுவான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

பூமியிலிருந்து தொலைதூரத்தில் வலம் வரும் கோளொன்று உயிரினங்களின் தாயகமாக இருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் நாஸா நிறுவனம் இயக்கும் James Web விண்வெளித் தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்விலேயே இது கண்டறியப்பட்டுள்ளது. K2-18b எனப்படும் கோளில் பூமியில் உள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியிலிருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வரும் K2-18b எனப்படும் ஒரு பெரிய கிரகத்தில்,…

Read More

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் புலனாய்வுத் துறையினர் – ரொஹான் சில்வா

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் புலனாய்வுத் துறையினர் – ரொஹான் சில்வா ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் நாட்டின் புலனாய்வுத் துறையினால் இருப்பது தெரியவந்துள்ளதாக சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் ரோஹான் சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வுத் துறையினர் ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னணியில் இருக்கின்றார்கள், தாக்குதல்களை மேற்கொண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணினார்கள் என்பது விசாரணை அறிக்கைகள் ஊடாக…

Read More

பெண் தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை

2030ஆம் ஆண்டுக்குள் கைப்பொருள் உற்பத்தியில் 400 பெண் தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய அருங்கலைகள் பேரவை தெரிவித்தது. இதன்மூலம் 4,000 சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் பேரவை தெரிவித்தது. 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 வீத பங்களிப்பை இதன் மூலம் வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read More

வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்…

மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை நாளை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். கண்டி, கேகாலை, மாத்தளை, பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

Read More